திருவருள்மிகு இருப்பிட்டி கல்லடி ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்மன் ஆலயம்

ஆலயத்தின் தோற்றம் மற்றும் சமூகப் பணிகளின் வரலாற்றுப் பயணம்

ஆலய பிரதான கடமைகளும் கிரியைகளும்

  • தொடர்ந்து ஆறுகால நித்திய நைமித்திய வழிபாடுகள்
  • வருடம் தோறும் அலங்காரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது
  • 100 நாள் கோடி அர்ச்சனை விழா
  • நவராத்திரி, கந்தசஷ்டி மற்றும் கேதாரகௌரி விரதங்கள்
  • சித்திரை வருடப்பிறப்பு மற்றும் ராகுகால பூசைகள்

கல்வியும் கலையும்

சிறுவர் சிறுமியரின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் முகமாக பண்ணிசை, வீணை, மிருதங்கம் போன்ற கலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கணிதம், விஞ்ஞாணம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

சங்கத்தின் தொண்டுகள் (Charitable Activities)

தாயக மக்களுக்கு உதவும் நோக்கில் அன்னையின் திருவருளோடு 'தாயின் நிழல்' எனும் திட்டம் உருவாக்கப்பட்டு மனிதநேயப் பணிகள் நடைபெறுகின்றன. இதன்கீழ் மாகதேவா ஆச்சிரமம் (கிளிநொச்சி), செஞ்சோலை இல்லம், விவேகானந்தா இல்லம் மற்றும் ஹரி இல்லம் போன்ற காப்பகங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

வவுனியாவில் உள்ள ஆனந்த இல்லத்தில் மனநலம் குன்றிய தாய்மார்களுக்கான பராமரிப்பு கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்குக் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

Year add ஆம் ஆண்டு

சங்கத் தோற்றம் (The Beginning)

எமது தாயக மக்களின் மொழி, கலை, கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்பது (09) அறங்காவலர்களைக் கொண்டு இந்தத் தமிழ் கலாச்சார சங்கம் (இருப்பிட்டி, புங்குடுதீவு) தோற்றம் பெற்றது.