திருவிழா கால அட்டவணை

Festival Schedule

ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த மற்றும் விசேட நிகழ்வுகளின் தொகுப்பு

A compilation of annual and special events held at the temple

ஏப்ரல் 14 (சித்திரை) April 14 (Chithirai)

சித்திரை வருடப்பிறப்பு பூசை

Tamil New Year Pooja

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு அன்னைக்கு விசேட பாலாபிஷேகம் மற்றும் ராகுகால பூசைகள் சிறப்பாக நடைபெறும்.

On the occasion of Tamil New Year, special Milk Abhishekam and Rahukaala Poojas are performed grandly for the Goddess.

ஆனி / ஆடி மாதம் Month of Aani / Aadi

வருடாந்த அலங்காரத் திருவிழா

Annual Alankara Festival

2004 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அலங்காரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அன்னை நாச்சிமார் விசேட வாகனங்களில் வீதியுலா வருவார்.

The Annual Alankara Festival has been celebrated grandly since 2004. During this 10-day festival, Goddess Naachimaar blesses devotees in procession on various special vehicles.

ஆவணி மாதம் (ஆகஸ்ட்) Month of Aavani (August)

வருடாந்த தெப்பத் திருவிழா

Annual Theppotsavam

அருள்மிகு நாகபுவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்) மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் காட்சியளித்து, கடல் அலையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

The annual Theppotsavam of Arulmigu Nagabhuvaneswari Amman Temple is celebrated with great devotion during the month of Aavani (August). The Goddess, adorned on a beautifully decorated float, graces the sacred sea waters, blessing all devotees who gather for this divine occasion.

புரட்டாதி மாதம் Month of Purattasi

சாரதா நவராத்திரி பெருவிழா

Saradha Navrathri Festival

ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலை நிகழ்வுகள் மற்றும் விசேட அர்ச்சனைகள் இடம்பெறும். விஜயதசமி அன்று ஏடு தொடக்கும் நிகழ்வும் நடைபெறும்.

The 9-day Navrathri festival features vibrant cultural events and special archanas. On Vijayadashami, the auspicious Vidhyarambham (Eedu Thodakkam) ritual is conducted.

ஐப்பசி மாதம் Month of Aippasi

கந்தசஷ்டி விரத பூசைகள்

Kanda Sashti Fasting Poojas

கந்தசஷ்டி விரத பூசைகள் மற்றும் சூரசம்ஹார நிகழ்வுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக நடைபெறும்.

The sacred Kanda Sashti fasting poojas and the Soorasamharam event are observed with deep devotion at the temple.

மாதாந்தம் Monthly

பௌர்ணமி & பிரதோச பூசைகள்

Pournami & Pradosham Poojas

ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் பிரதோச தினங்களிலும் அன்னைக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Special Abhishekam, Aradhana, and rituals are conducted for the Goddess on every monthly Pournami (Full Moon) and Pradosham days.